Enable Javscript for better performance
இளம்பெண் மானபங்கம்: திருமணம் செய்ய மறுத்ததாக புகார்- Dinamani

சுடச்சுட

    

    இளம்பெண் மானபங்கம்: திருமணம் செய்ய மறுத்ததாக புகார்

    By ஜயங்கொண்டம்  |   Published on : 27th June 2015 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம்,ஜயங்கொண்டம் அருகே பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்தவர் மீது ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள கோவிந்தபுரம் காலனி தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகள் நிர்மலா (19). இவர், 12-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இவரும், இவரது அண்டை வீட்டில் வசிக்கும் நாகராஜன் மகன் குட்டி என்கிற ராமராஜனும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில்,கடந்த மே 30 ஆம் தேதி, ராமராஜன் நிர்மலாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று மானபங்கம் செய்ய முயன்றாராம்.

    இதையடுத்து வந்த நிர்மலாவின் அண்ணன், ராமராஜனை மிரட்டியதில் நிர்மலாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினாராம்.

    பின்னர், திருமணம் செய்ய மறுத்ததையடுத்து, நிர்மலா ஜயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai