Enable Javscript for better performance
குறுவை சாகுபடி திட்டத்தில் பயன்பெற மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    குறுவை சாகுபடி திட்டத்தில் பயன்பெற மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    By அரியலூர்  |   Published on : 27th June 2015 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறுவை சாகுபடித் தொகுப்பு உதவித் திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் இம்மாத(ஜூன்) இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள குறுவை சாகுபடி தொகுப்பு உதவி திட்டத்தில் பயன் பெற விரும்பும்

    விவசாயிகள், இயந்திரம் மூலம் நெல் நடவு, நுண்ணூட்டச் சத்து மற்றும் உயிர் உரங்கள் பயன்படுத்துதல் மற்றும் விலையில்லா ஜிப்சம் வழங்குதல் ஆகியவற்றிற்கென உள்ள விலையில்லா விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஜூன் மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், வேளாண் இணை இயக்குநர் (பொ) மனோகரன், திட்ட இயக்குநர் (பொ) சாமுவேல் இன்பதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai