Enable Javscript for better performance
மீன்சுருட்டி அருகே வயல்வெளியில் இளைஞர் சடலம் - Dinamani

சுடச்சுட

    

    மீன்சுருட்டி அருகே வயல்வெளியில் இளைஞர் சடலம்

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 27th June 2015 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம்,ஜயங்கொண்டம் அருகே மர்மமான முறையில் வயல்வெளியில் இளைஞரின் சடலம் கிடந்தது குறித்து மீன்சுருட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வீரசோழபுரத்தைச் சேர்ந்த திருஞானம் மகன் மணிமாறன்(24). இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் மீதான கொள்ளை வழக்கு ஒன்றில் ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராக இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சண்முகம் என்பவரது சாலை ஓரத்தில் உள்ள வயலில் மணிமாறனின் சடலமும் அருகில் அவரது மோட்டார் சைக்கிளும் கிடப்பதாக வந்த தகவலை அவரது தாய் உறுதி செய்த பின், மீன்சுருட்டி காவல் நிலையத்தில்

    புகாரளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai