Enable Javscript for better performance
ரூ.33.95 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு உதவித்திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரூ.33.95 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு உதவித்திட்டம்

    By அரியலூர்  |   Published on : 27th June 2015 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் ரூ. 33.95 லட்சம் மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு உதவித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழக அரசு 2015ஆம் ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை இரு மடங்காக உயர்த்திடவும், இதன் மூலம் விவசாயிகளின் லாபத்தை மும்மடங்காக உயர்த்திட குறுவை தொகுப்பு உதவித் திட்டத்தினை செயல்படுத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா. பழூர், ஜயங்கொண்டம் வட்டாரங்களில் இத்திட்டம் ரூ. 33.95 லட்சம் மதிப்பீட்டில், பின்வரும் மூன்று திட்ட உட்பிரிவுகள் வாரியாக செயல்படுத்தப்படவுள்ளது.

    இதில் குறுவை நெல் சாகுபடியை இயந்திர நடவு மூலம் மேற்கொள்ள உத்தேசித்து, இயந்திர நடவுக்கு நாற்று விடும் விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக நெல் நடவு செய்து கொடுக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 2,500 வீதம் 770 ஏக்கரில் நடவு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    குறுவை சாகுபடியில் நெல் நுண்ணூட்டச்சத்து மற்றும் உயிர் உரங்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்திட ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 315 வீதம் 4 ஆயிரம் ஏக்கர் பரப்புக்கு நேரடியாக விவசாயிகளின் வங்கி சேமிப்புக் கணக்குகளில் வரவு வைத்திடவும் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

    களர் பிரச்னை உள்ள நிலங்களில் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 200 கிலோ என்ற அளவில் ஜிப்சம் விலை எதுவுமின்றி 1500 ஏக்கர் பரப்புக்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகளின் பட்டியல் அந்தந்த பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் தயார் செய்யப்பட்டு வருகிறது. எனவே குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ளவுள்ள விவசாயிகள் அரசின் மானியத்தை பெற்றிட வேளாண் விரிவாக்க மையங்களில் முன்னுரிமைப் பதிவேட்டில் தங்களது பெயரை பதிவு செய்திடவும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai