Enable Javscript for better performance
அரியலூரில் ஜூன் 30-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் ஜூன் 30-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By dn  |   Published on : 28th June 2015 11:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) நடைபெற உள்ளது.

     அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூன் 30 ஆம் தேதி மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கின்றனர். எரிவாயு நுகர்வோர் இந்தக் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று

    ஆட்சியர் எ. சரவணவேல் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai