Enable Javscript for better performance
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

    By dn  |   Published on : 28th June 2015 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை 1 முதல் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி.

    அரியலூரில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து காவலர்களின் விழிப்புணர்வுப் பேரணியை சனிக்கிழமை தொடக்கி வைத்ததுடன் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்துப் பேசினார்.

    அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் அண்ணா சிலையை அடைந்தது. இதில், அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் சரவணபவன், அரியலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூரில்: பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் த. அறிவழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 206ன் படி,  சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும். இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய தலைக்கவசம் வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும் என்றார் அவர்.

    புறநகர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆத்தூர் சாலையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாபு, பெரியசாமி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai