Enable Javscript for better performance
காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை - Dinamani

சுடச்சுட

    

    காலமுறை ஊதியம் வழங்க தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    துறைமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத் தலைவர் செல்லப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப நல பாதுகாப்புடன் கூடிய சட்ட ரீதியான ஊதியம் வழங்க வேண்டும்.

    காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த 7 நாள் ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    பிற துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களில் தகுதியுள்ள சத்துணவு ஊழியர்களை பணி அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai