Enable Javscript for better performance
குடும்பத்தகராறில்  இளம்பெண் மாயம் - Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே இளம்பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தை அடுத்த குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகள் அறிவுச்சுடர் (21). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் திருமணமாகி ஒராண்டு ஆகிறது. இந்நிலையில், அறிவுச்சுடர் அடிக்கடி செல்லிடப்பேசி வந்ததை அவரது கணவர் மற்றும் மாமியார் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அறிவுச்சுடர், தனது கணவருடன் கோபித்துக்கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம். கடந்த சில மாதங்களாக அங்கேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி மனமுடைந்த அறிவுச்சுடர், தான் யாருக்கும் தொந்தரவாக இருக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து, அவரது தந்தை கலியமூர்த்தி அளித்தப் புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai