Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சிக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சிக் கூட்டம்

    By dn  |   Published on : 28th June 2015 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பழூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் ஒன்றிய பேரவைக் கூட்டம், தனியார் மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஜயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் கே. மகாராஜன் தலைமை வகித்தார். தா.பழூர் ஒன்றியச் செயலாளர் எம். இளங்கோவன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் வி. பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் ஐ. வி. நாகராஜன், அரியலூர் மாவட்டச் செயலாளர் ஆர். மணிவேல் உள்ளிட்டோர் பேசினர். 

    இதில், மாவட்ட குழு உறுப்பினர் தமிழரசி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வெங்கடாசலம், ஒன்றிய விவசாயத் தொழிலாளர் சங்க செயலாளர் மகேந்திரன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பத்மாவதி பழனிவேலு, பிச்சைபிள்ளை, மெய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai