Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

    By dn  |   Published on : 28th June 2015 11:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

    இப்பேரணிக்கு பள்ளி தலைமையாசிரியர் ந. கணேசன் தலைமையில், நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ பிரியன் தொடங்கி வைத்தார்.

    பேரணியில் பங்கேற்ற ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், "ஒழிப்போம்! ஒழிப்போம்!! மதுவை ஒழிப்போம்!', "காப்போம்!, காப்போம்!! வருங்கால சந்ததியினரைக் காப்போம்!' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கோஷமிட்டவாறு சென்றனர்.

    பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இறுதியில், உடற்கல்வி இயக்குநர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai