Enable Javscript for better performance
தா. பழூர் பேருந்து நிலையத்தில் அரசின் சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    தா. பழூர் பேருந்து நிலையத்தில் அரசின் சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சி

    By dn  |   Published on : 28th June 2015 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் பேருந்து நிலையத்தில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

    இதில், தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், "பசுமை வீடுகள்' வழங்கும் திட்டம், "தாலிக்கு தங்கம்' வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவன இ-பொதுசேவை மையங்களின் செயல்பாடு, விலையில்லா கறவை பசுக்கள்,  விலையில்லா மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள்  உதவித்தொகை,  முதல் அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், சீருடைகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

    இக்கண்காட்சியை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி களைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai