Enable Javscript for better performance
திருமானூர் அருகே பள்ளி மாணவர் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம்,திருமானூர் அருகே பள்ளிக்குச் சென்ற தனது மகனைக் காணவில்லை என அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

    திருமானூரைச் சேர்ந்த முனியப்பன் மகன் பரணிதரன்(14). அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு

    பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை.

    அவரது பெற்றோர் அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து திருமானூர் காவல் நிலையத்தில் முனியப்பன் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai