Enable Javscript for better performance
மாணவர்களின் கற்றல் அடைவுநிலை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களின் கற்றல் அடைவுநிலை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

    By dn  |   Published on : 28th June 2015 11:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஜயங்கொண்டம் வட்டார வள மையத்திற்குள்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கலந்துரையாடல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    "குழந்தைகளின் கற்றல் அடைவுநிலை' குறித்த ஒரு நாள்  பயிற்சியை வள மைய மேற்பார்வையாளர் பாலாஜி தொடங்கி வைத்தார். பயிற்சியினை அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் கணேசன், உடையார்பாளையம் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் வெங்கடேசன், அந்தோணி லூர்து சேவியர், தாமோதரன், பாலமுருகன், அற்புதசாமி, செந்தில்குமார், உத்திராபதி, இளவரசி, சாந்தி, சுதா ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர். இதில், மாணவர்களின் கற்றல் அனுபவம், வயதிற்கேற்ப பெற வேண்டிய கற்றல் திறன்கள், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை குறித்தும் அதனை ஒப்பீடு செய்து மாணவர்களின் அடிப்படை திறன்களான வாசித்தல், எழுதுதல், மற்றும் கணித அடிப்படை திறன்களை வளர்த்தல் குறித்தும் பயிற்சியளித்தனர். இப்பயிற்சியில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மொத்தம் 203 பேர் பயிற்சி பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai