Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் 664 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் 664 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள்

    By அரியலூர்,  |   Published on : 29th June 2015 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 664 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    அரியலூர் மாவட்ட வழங்கல் துறையின் சார்பில்,நடைபெற்ற புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியில், செந்துறையைச் சேர்ந்த 471 பேருக்கும், அரியலூரைச் சேர்ந்த 193 பேருக்கும் என மொத்தம் 664 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)லலிதாவதி, சிறப்புத்திட்டங்கள் துணை ஆட்சியர் மு. தமிழ்ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் அ. பூமி, வட்ட வழங்கல் அலுவலர் சு. முத்துலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai