தே.மு.தி.க. சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள்
By அரியலூர் | Published on : 29th June 2015 04:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. தொழிற்சங்கம் சார்பில் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா தா.பழூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தா.பழூர் ஒன்றியச் செயலாளர் அறிவழகன் வரவேற்றார். இதில், மாவட்டச் செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் தொழிற்சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் வேல்மணி, பொருளாளர் வேல்முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் கவியரசன், பொதுக்குழு உறுப்பினர் ஜேக்கப், தா.பழூர் ஒன்றிய நிர்வாகிகள் சதாசிவம், அசோக்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொளஞ்சி நன்றி கூறினார்.