Enable Javscript for better performance
நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், செந்துறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் மாவட்ட ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ள வாணிப கழகக் கிடங்கில் மாவட்ட ஆட்சியர் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை ஆகிய உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் அவை குறித்த பதிவேடுகளை ஒப்பிட்டு ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    மேலும், நியாய விலைக்கடை அங்காடிகளுக்கு அனுப்பப்படும் உணவுப்பொருட்களின் எடை சரியாக இருக்கிறதா என்பதையும் ஆட்சியர் ஆய்வு செய்து உறுதி செய்து கொண்டார்.

    ஆய்வின்போது, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பாபு, துணைப்பதிவாளர் கே.கே.செல்வராஜ், கிடங்கு தர ஆய்வாளர் வீராசாமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai