Enable Javscript for better performance
அரியலூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: ரூ.3.15 கோடியில் நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: ரூ.3.15 கோடியில் நலத்திட்ட உதவிகள்

    By அரியலூர்  |   Published on : 30th June 2015 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 750 பயனாளிகளுக்கு ரூ. 3.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் அரியலூர், ஜயங்கொண்டம், செந்துறை வட்டங்களைச் சேர்ந்த 175 பயனாளிகளுக்கு ரூ. 17.50 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார்.

    மேலும், கூட்டுறவுத் துறை சார்பில், 175 பேருக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் ரூ. 1.09 கோடி மதிப்பிலான பயிர்க் கடனுதவிக்கான காசோலை, புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில், 54 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.16 கோடி கடனுதவிக்கான காசோலை, மகளிர் திட்டம் சார்பில், 24 குழுக்களுக்கு ரூ. 49.79 லட்சம் கடனுதவிக்கான காசோலை, அரியலூர், செந்துறை, ஜயங்கொண்டம் சமுகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 332 பயனாளிகளுக்கு ரூ. 38.54 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிக்கான காசோலைகள் என மொத்தம் 750 பயனாளிகளுக்கு ரூ. 3.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

    கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆட்சியர், இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் எல்.வி. சந்திரசேகரன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் பி. நீதிமணி, சி. ராஜகுமார், முதுநிலை ஆய்வாளர் க. சுரேஷ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai