Enable Javscript for better performance
முன்னாள் மாணவர்கள் ரூ. 3.5 லட்சம் உதவி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ. 3.5 லட்சம் உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

    இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் ந. கணேசன் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் கணேஷ் முன்னிலை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவரும், சிறுதுளி அறக்கட்டளை அறங்காவலருமான அழகியநம்பி பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் 5 கணினி, கடைசல் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிப் பேசினார். முன்னாள் மாணவர் ஆர்.கே. செல்வமணி, பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ. 50 ஆயிரம் வழங்கிப் பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெ. முத்தையன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ஆர். ராஜப்ரியன் வரவேற்றார். தமிழாசிரியர் சகஜானந்தா நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai