Enable Javscript for better performance
அரியலூர், ஜயங்கொண்டம் தொகுதியில் சக்கர நாற்காலிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர், ஜயங்கொண்டம் தொகுதியில் சக்கர நாற்காலிகள் ஆய்வு

    By அரியலூர்  |   Published on : 15th April 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர், ஜயங்கொண்டம் தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக வரப்பெற்றுள்ள சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து அவர் தெரிவித்தாவது:

     அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4,054 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதுதவிர, 2016, ஜன. 20-ம் தேதி வரை 255 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரு தொகுதியிலுள்ள 582 வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்காளிக்க ஏதுவாக சாய்வுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் செல்ல ஏதுவாக சக்கர நாற்காலிகள் வழங்கப்படுவதற்காக வரவழைக்கப்பட்டு வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    இவை தவிர கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்த பயிற்சிகளும், கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தி அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றார்.

    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தேர்தல் வட்டாட்சியர் ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai