Enable Javscript for better performance
குடிநீர் கோரி தா.பழூரில் கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் கோரி தா.பழூரில் கிராம மக்கள் சாலை மறியல்

    By ஜயங்கொண்டம்  |   Published on : 15th April 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தா.பழூர் பகுதியில் குடிநீர் வராததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் காலனி தெருவில் ஒரு பகுதியில் மட்டும் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தா.பழூர் - கும்பகோணம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தா.பழூர் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய ஆணையர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஊராட்சித் தலைவர் மஞ்சுகுமாரிடம் கேட்டபோது, தற்போது கோடைக்காலம் என்பதால் குடிநீர் விநியோகத்தில் சற்று தடை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குடிநீர் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai