Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே ரூ. 3.40 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3.40 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    ஜயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர்கோவில் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும்படை நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் கண்ணன் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை வாகனச் சோதணையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஜயங்கொண்டத்தில் இருந்து மீன்சுருட்டி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது அதில் உரிய  ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3.40 லட்சம் இருந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai