Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

    By அரியலூர்  |   Published on : 15th April 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் புத்தாண்டையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மன்மத ஆண்டு முடிந்து துர்முகி ஆண்டு தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ்ப் புத்தாண்டான வியாழக்கிழமை பெரும்பாலான இந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள ஸ்ரீபூமி நிளா சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    முன்னதாக கோ- பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூ அலங்காரம், பழ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. நீண்ட ரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் சித்திரை மாதம் தொடங்கியதையடுத்து அக்கோயிலுள்ள ஐயப்பனுக்கு விஷ்ணு கனி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    கல்லங்குறிச்சி கலியுக வரதராஜன்பெருமாள் கோயில், திருமனூர் விநாயகர் கோயில், திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில்,செந்துறை சிவன் கோயில் ஜயங்கொண்டம் பிரகதீஸ்வரர் கோயில்,கீழப்பழுவூர், மேலப்பழுவூர், உடையார்பாளையம், பொன்பரப்பி, வி.கைகாட்டி, மீன்சுருட்டி, ஆர்.எஸ். மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும்,

    அபிஷேகம் நடைபெற்றன. மேலும் மேற்கண்ட கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai