Enable Javscript for better performance
ஜெருசலேம் பயணத்துக்கு உதவித் தொகை: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஜெருசலேம் பயணத்துக்கு உதவித் தொகை: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 28th November 2016 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெறலாம். மேலும் w‌w‌w.bc‌m​b​c‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதள முகவரியிலும் படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில், ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807, (5வது தளம்) அண்ணாசாலை, சென்னை - 600 002  என்ற முகவரிக்கு 16.12.2016 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும் என ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai