Enable Javscript for better performance
தா.பழூர் வட்டார ஆசிரியர்களுக்கு கலந்துரையாடல் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தா.பழூர் வட்டார ஆசிரியர்களுக்கு கலந்துரையாடல் பயிற்சி

    By DIN  |   Published on : 28th November 2016 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தா.பழூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், வட்டார வளமையத்திற்கு உட்பட்ட தொடக்க நிலை மற்றும் உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் குழந்தைகளுக்கான கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    தா.பழூர் வட்டார வளமைய மேற்பாற்வையாளர் (பொ) பாண்டியன் தலைமை வகித்து பயிற்சியை தொடக்கி வைத்தார். இதேபோல், ஸ்ரீபுரந்தான், விக்கிரமங்கலம், இடங்கண்ணி, கோடாலிகருப்பூர், சுத்தமல்லி ஆகிய மையங்களிலும் நடைபெற்றது.  
    இப்பயிற்சியில் குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்து தேசிய கலைத்திட்டம், இலவச கட்டாய கல்வி, கற்றல் குறியீடு, கற்றல் வளைவு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    ஆசிரியர் பயிற்றுநர்கள் சுந்தரவள்ளி, இளவழகன், ரவிச்சந்திரன், ராஜி,
    கண்ணதாசன், மோகன், சம்பத் ஆகியோர் பயிற்சியளித்தனர். இதில் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் 240 பேரும், தொடக்க நிலை ஆசிரியர்கள் 180 பேரும் என 420 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai