Enable Javscript for better performance
நாகமங்கலத்தில் ஒருங்கிணைந்த உளுந்து பயிர் மேலாண்மை பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நாகமங்கலத்தில் ஒருங்கிணைந்த உளுந்து பயிர் மேலாண்மை பயிற்சி

    By DIN  |   Published on : 28th November 2016 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகேயுள்ள நாகமங்கலம் கிராமத்தில் அட்மா மற்றும் விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ், உளுந்து பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
    மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ரெ.சதனாந்தம் தலைமை வகித்து பயிற்சியை தொடக்கி வைத்தார்.
    அப்போது அவர் கூறும்போது, உளுந்து பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையின் அவசியம் குறித்தும், உளுந்து, துவரை, தெளிப்பு நீர், உழவு இயந்திரம், நெல்லில் இயந்திர நடவு, நீர் குழாய் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானியம் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கினார்.
    வட்டார வேளாண் உதவி இயக்குநர் சி. பாஸ்கரன் பேசும்போது, இப்பருவத்திற்கு ஏற்ற உளுந்து ரகங்கள் வம்பன்-5, வம்பன்-6 பற்றியும் அதன் தன்மைகள் பற்றியும் விளக்கினார். அரியலூர் வட்டார வேளாண் அலுவலர் அ. சவீதா,
    ஒருங்கிணைந்த உளுந்து பயிர் மேலாண்மையில் நுண்ணுயிர் உரங்களான  ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் பற்றி எடுத்துரைத்தார்.
    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ந. பழனிசாமி, அட்மா திட்டம் குறித்து பேசினார். ஏற்பாடுகளை வேளாண் துணை அலுவலர் ம. இளவரசன், அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் இரா. வாசுகி, செ. சுந்தரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
    நிறைவில், அட்மா திட்ட விவசாய நண்பர் சு. செல்லப்பிள்ளை நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai