Enable Javscript for better performance
மீன், இறால் வளர்ப்புக்கு மானியம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் நன்னீர் மீன் வளர்ப்பு, உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்களில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் மோட்டார், காற்றுப்புகுத்தி மற்றும் விளக்குகள் ஆகியவற்றை அமைப்பதற்காக ஆகும் செலவினத் தொகை ரூ.15 லட்சத்தில் 50 விழுக்காடு ரூ.7.50 லட்சம் மானியத் தொகையாக வழங்கப்படுகிறது.மீன், இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்கள் இந்த விளம்பரம் வெளிவந்த 30 நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
    மேலும் விவரங்களுக்கு அரியலூர் ஆட்சியரகத்தில் 2-வது தளத்தில் அறை எண். 234-ல் செயல்படும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விவரம் பெறலாம்.முன்னுரிமை மற்றும் தகுதிகள் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai