Enable Javscript for better performance
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    2016-17ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை  நடைபெற்றது.
            முன்னதாக, போட்டியை மண்டல விளையாட்டு முதுநிலை மேலாளர் கீதாஞ்சலி ரத்தினமாலா தொடக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுநாதன் முன்னிலை வகித்தார்.இதைத் தொடர்ந்து, நீச்சல், பளுதூக்குதல்,  குத்துச்சண்டை, பென்சிங், டேக் வோண்டோ, தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஜுடோ, கடற்கரை கையுந்துபந்து  ஆகிய போட்டிகள் நடைப்பெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
       மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடம் பெற்றவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சனிக்கிழமை மாலையில் நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றுகளை வழங்கினார். விளையாட்டு பயிற்றுநர் சதீஷ் உள்ளிட்ட பல்வேறு உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai