Enable Javscript for better performance
அரியலூர் தொழிலாளி கொலை: நண்பர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளி பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.
    அரியலூர் மாவட்டம், செந்துறை நம்மங்குளத்தைச் சேர்ந்தவர் க.கண்ணன் (43). இவர் கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள எலுமிச்சை பழ மொத்த விற்பனைக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் தங்கியிருந்தார். இவரும், திருச்சி கருங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக தொழிலாளியான க.ஆனந்தனும் (24) எலுமிச்சை பழக் கடையின் அருகே வியாழக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனர்.
    அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு முற்றியது. இதில், கண்ணனின் வயிற்றில் பாட்டில் குத்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து, ஆனந்தனை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai