Enable Javscript for better performance
அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ், கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 4) முதல் சனிக்கிழமை (அக். 8) வரை அரியலூர் மாவட்ட அளவில் அறிவியல் ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சி மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
    பயிற்சிக்கு அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மாரிமுத்து தலைமை வகித்தார். பயிற்சியில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு உள்ளடங்கிய பயிற்சி, ஒருங்கிணைந்த கணினி வழி கல்வி பயிற்சி. பாலியல் பாகுபாடு தொடர்பான பயிற்சி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
    இதில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி, கல்வி மாவட்ட உதவி திட்ட இயக்குநர்கள் ரங்கமணி, செல்வகுமார் மற்றும் பயிற்சியாளர்கள் செந்தில்குமார், ரவிச்சந்திரன், உத்திராபதி, கே.ஆர். செந்தில்குமார், சத்தியராஜ், ராஜா, காசி, மணிவண்ணன், மோகன், நடராஜன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
    பயிற்சியில் அரியலூர் மாவட்டத்துக்குள்பட்ட அரியலூர், திருமானூர், செந்துறை, ஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஒன்றியங்களில் இருந்த 190 ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai