Enable Javscript for better performance
காவிரி: மத்திய, கர்நாடக அரசுகளை கண்டித்துஅக். 20-ல் என்எல்சி-யை முற்றுகையிட விவசாயிகள் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி: மத்திய, கர்நாடக அரசுகளை கண்டித்து அக். 20-ல் என்எல்சி-யை முற்றுகையிட விவசாயிகள் முடிவு

    By DIN  |   Published on : 08th October 2016 02:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடாத கர்நாடக மாநிலத்துக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்த வலியுறுத்தி, நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை வரும் 20ஆம் தேதி முற்றுகையிட தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
    அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் இருந்து மின்சாரம் வழங்குவதை நிறுத்த வலியுறுத்தியும் வரும் 20 ஆம் தேதி நெய்வேலி என்.எல்.சி-யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, முதல்வர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சியினர் கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும்.
    அரியலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் சிமென்ட் மூட்டைகளை கர்நாடக மாநிலத்துக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும், மீறினால் சிமென்ட் ஆலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ. விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai