Enable Javscript for better performance
குடும்ப பிரச்னை: விஷம் குடித்து கணவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே குடும்பப் பிரச்னையில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் விஷம் குடித்து கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
    ஜயங்கொண்டம் அருகே உள்ள இளமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (31). இவருக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர்.
    இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்வதால், அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது அப்பா வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ரமேஷ், வியாழக்கிழமை இரவு பூச்சிமருந்தை குடித்தார். இதையடுத்து, அவர் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரமேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்பேரில், உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai