Enable Javscript for better performance
நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு

    By DIN  |   Published on : 08th October 2016 02:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் நகராட்சிக்குள்பட்ட ஏரி, குளம், வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை ஆட்சியர் எ. சரணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
    அப்போது அவர் கூறியதாவது: அரியலூர் நகராட்சிக்குள்பட்ட செட்டி ஏரி மெயின் வாய்க்கால், ஐயப்பன் ஏரி வாய்க்கால், பெரியத்தெரு, கோசி நகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, வாய்க்கால்களை அகலப்படுத்தும் பணி வியாழக்கிழமை முதல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    இந்த வாய்க்கால்களில் உள்ள அடைப்புகள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உடனடியாக நகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
    இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் காலத்தில் நீர் தேங்காமல் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளம், வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
    ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் யோகேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் கங்காதாரணி, நகராட்சி ஆணையர் (பொ)சரஸ்வதி, அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன் மற்றும் வருவாய்த் துறை, வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai