Enable Javscript for better performance
பிரதமரின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிரதமரின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 02:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமரின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சுகந்தி தெரிவித்துள்ளார்.
    பெரிகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சுகந்தி மேலும் பேசியதாவது:
    பிரதம மந்திரி பசல்பீமா யோஜனா பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், நடவு செய்ய இயலாத நிலை, விதைத்து கருகிய பயிர், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள காலத்தில் ஏற்படும் இடாóகள், வெளóளம், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகள் போன்ற காரணங்களால் பயிர்களில் ஏற்படும் இழப்பிற்கு காப்பீடு பெறலாம்.
    வங்கிகளில் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் இத்திட்டத்தில் சோóந்து பயன்பெறலாம். ஆண்டிமடம் வட்டத்தில் நெற்பயிருக்கு 25 கிராமங்களும், மக்காச்சோளத்திற்கு 7 கிராமங்களும், உளுந்து பயிருக்கு 9 கிராமங்களும் மற்றும் நிலக்கடலைக்கு 16 கிராமங்களும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. ஏக்கருக்கு நெல் சம்பாவிற்கு பிரீமியத் தொகை ரூ.375, மக்காச்சோளத்திற்கு ரூ.263, உளுந்துக்கு ரூ.180, நிலக்கடலைக்கு ரூ.330. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ பிரீமியத்தை செலுத்தலாம். நெல் சம்பாவிற்கு பிரீமியம் தொகை செலுத்த கடைசி நாள் 30.11.16. ரபி மக்காச்சோளத்துக்கு 10.11.16, உளுந்திற்கு 15.12.16 மற்றும் நிலக்கடலைக்கு 31.12.16 ஆகும். இக்கடைசி தேதிக்குள் வேளாண்மை உதவி இயக்குநர்அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பிரீமியத்தொகை செலுத்த வேண்டும் என்றார்.
    முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அந்தோனிராஜ் மற்றும் கொளஞ்சி ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai