Enable Javscript for better performance
உடையார்பாளையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    உடையார்பாளையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

    By DIN  |   Published on : 15th October 2016 06:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அரியலூர் மாவட்ட செய்தி,மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், விலையில்லா கறவை பசுக்கள், அம்மா உணவகம், சானிடரி நாப்கின், கோயில்களில் அன்னதான திட்டம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டம், மகப்பேறு நிதியுதவி திட்டம், அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம், ஏழை எளியவர்களுக்கு விலையில்லா ஆடுகள்,விரைவு பட்டா மாறுதல் முகாம் மூலமாக பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் ஆணைகள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச. நந்தகுமார், உதவி அலுவலர்கள் க. சரவணன், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai