Enable Javscript for better performance
காரில் கடத்திச் சென்ற மதுபானங்கள் பறிமுதல்: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காரில் கடத்திச் சென்ற மதுபானங்கள் பறிமுதல்: 3 பேர் கைது

    By DIN  |   Published on : 15th October 2016 06:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே காரில் வெளிமாநில மதுபான பாட்டில்கள் கடத்தி  வந்த 3 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    கங்கைகொண்ட சோழபுரம் அருகே பொன்னேரி பகுதியில் மீன்சுருட்டி போலீஸார் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் 36 புதுச்சேரி மாநில மதுபானப் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
    காரில் இருந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார், அரியலூர் கல்லங்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திக் (34),வினோத் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 36 மதுபான பாட்டில்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai