Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் கீழ் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி சமூக அறிவியல் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் பயிற்சி ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது.
    பள்ளித் தலைமை ஆசிரியர் ந. கணேசன் தலைமை வகித்தார். 2 நாட்கள் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறை மற்றும் அவர்களைக் கண்டறிதல் குறித்த பயிற்சியும், பாலின சமநிலை குறித்து ஒரு நாளும், 2 நாட்கள் கணினிவழி கற்பித்தல் பயிற்சியும் நடைபெறுகிறது. இதில் கு. கோபிநாதன், மு. ஜெயராஜ், மா. பாண்டியன், ந. தேவேந்திரன், ராஜா, ப. மத்தியாஸ், ச. ராயர் ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர்.
    ஏற்பாடுகளை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. செல்வகுமார் செய்தார். பயிற்சியில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலை ஆசிரியர்கள் 120 பேர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai