Enable Javscript for better performance
தா.பழூர் அருகே மணல் குவாரியை மூட வலியுறுத்தி 30 லாரிகள் சிறைபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தா.பழூர் அருகே மணல் குவாரியை மூட வலியுறுத்தி 30 லாரிகள் சிறைபிடிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மணல் குவாரியை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சுமார் 30 லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தா.பழூர் அடுத்த மேலகுடிகாடு கிராமம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி உள்ளது. இந்த குவாரியிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டு செல்வதால் அங்குள்ள கிராமச் சாலைகள் முழுவதும் சேதமடைந்துள்ளது. மேலும் அப்பகுதியில் லாரிகளால் அடிக்கடி விபத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன. மணல் குவாரி பள்ளங்களில் கால்நடைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும், குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதால் சம்பந்தப்பட்ட குவாரியை மூட வேண்டுமென மேலகுடிகாடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    இந்நிலையில் வெள்ளிக்கிழமை குவாரியிலிருந்து மணல் அள்ளிக்கொண்டு வந்த 30-க்கும் மேற்பட்ட லாரிகளை மேலகுடிகாடு கிராம மக்கள் சிறை பிடித்து, குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்து வந்த தா. பழூர் போலீஸார் கோரிக்கை குறித்து மேல் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai