Enable Javscript for better performance
மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்: கணவர் உள்பட 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்: கணவர் உள்பட 2 பேர் கைது

    By DIN  |   Published on : 15th October 2016 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கணவர் உள்பட 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
     அரியலூர் அருகேயுள்ள சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி (27) என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு செப். 16-ம் தேதி திருமணம் செய்தார்.  
        இந்நிலையில் வீரமணி, ஜெயக்கொடியிடம் வரதட்சிணை கேட்டு தகராறு செய்தாராம். இதனால் ஜெயக்கொடி கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனிடையே வீரமணி கடந்த 2016, செப். 17-ம் தேதி சுகன்யா என்பவரை, ஜெயக்கொடிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
    இதுகுறித்து தகவலறிந்த ஜெயக்கொடி, வீரமணியிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது வீரமணியும், அவரது உறவினர்களும் ஜெயக்கொடியை தரக்குறைவாகப் பேசி, கொலைமிரட்டல் விடுத்தனராம். இதைத் தொடர்ந்து ஜெயக்கொடி அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் வீரமணி, அவரது சகோதரர் அழகரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும் வீரமணியின் தாய் அம்மாகண்ணு, சகோதரி மேகா, 2-வது மனைவி சுகன்யா, உறவினர்கள் மதியழகன், ராஜா ஆகியோரை தேடிவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai