அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் சங்க தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓடிஏ நிறுவன இயக்குநர் லோபிதாஸ் குத்துவிளக்கேற்றி, சங்கத்தின் நோக்கம், எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.
திருச்சி இன்டேக்ட் சிறப்புப் பள்ளியின் இயக்குநர் தாமஸ் எபினேசர், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி குறித்தும், அரசின் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு பெறுவது, பெற்றோர்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து பேசினர்.
சங்கத்தின் தலைவராக து.வனதரசன், துணைத் தலைவராக சகாயம், செயலாளராக முத்துலட்சுமி, பொருளாளாரக கவிதா ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். முன்னதாக நேரு வரவேற்றார். 50-க்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.