ரத்த தானம் செய்வதை தனியார் தொண்டு நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன்.
உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரியலூரில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறை, மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை அவர் தொடக்கி வைத்துப் பேசியது:
மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்திட வேண்டும். ரத்த தானம் வழங்குவதனால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
ரத்தம் வழங்குவதனால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று குருதி கொடையாளர்கள் அச்சப்படத்தேவையில்லை. மேலும் ரத்த தானம் செய்வதை தனியார் தொண்டு நிறுவனங்களும் ஊக்கப்படுத்தி ரத்த தானம் வழங்கி குருதி சேமிப்பு வங்கிகளில் குருதி சேமிக்க உதவிட வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக அவர், அதிக முறை ரத்த தானம் வழங்கிய 9 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்பார்வையாளர் சுமதி, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி முதல்வர் ராதாகிருஷ்ணன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு பணியாளர்கள் மகேந்திரன், செல்லமுத்து, சுதா மற்றும் நம்பிக்கை மையம், சுகவாழ்வு மைய ஆற்றுநர்களும், மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கி, பிரதான சாலை வழியாக நகர் முழுவதும் சென்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.