மேலக்குடிகாடு அய்யனார் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் தென்கச்சிபெருமாள்நத்தம் ஊராட்சி மேலக்குடிகாடு கிராமத்தில் ஓதியடியார் என்னும் ஆதனமொழியார் அய்யனார் கோயிலில் வினைதீர்த்த விநாயகர், பூவாடைக்காரி, அக்னிவீரன், மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பசாமி, பைரவநாகநாதர் ஆகிய தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா நடத்த ஊர் மக்கள் ஏற்பாடு செய்து, கடந்த 13 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கோ பூஜை, கணபதி ஹோமம்,
லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி என பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து கடம்புறப்பாடு நடைபெற்று கோயில் கலசத்தில் பட்டாச்சாரியார் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தார்.
விழாவில் மேலக்குடிகாடு, தென்கச்சிபெருமாள்நத்தம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.