அரியலூர் மாவட்டம், வி. கைகாட்டி அருகே புதன்கிழமை மாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார். அவரது கணவர் பலத்த காயமடைந்தார்.
வி. கைகாட்டி அருகேயுள்ள தேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன் (50), விவசாயி. புதன்கிழமை இவரும், இவரது மனைவி சந்திராவும் (45) அரியலூரிலுள்ள வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வி. கைகாட்டி மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, பின்னால் சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரி மோதி சந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கருப்பையா பலத்த காயமடைந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை மறித்து கண்ணாடியை உடைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாகவும்,இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த அரியலூர் மற்றும் கயர்லாபாத் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து போலீஸார் சந்திராவின் சடலத்தையும்,கருப்பையாவையும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.