அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்துக்குட்பட்ட கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து செந்துறை வட்டாட்சியர் வேல்முருகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உடையார்பாளையம் வட்டத்தில் காலியாக உள்ள 7 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு குறிப்பிட்ட இனத்தவர்கள் மற்றும் செந்துறை வட்டத்தை மட்டும் வசிப்பிடமாக கொண்டோர் விண்ணப்பிக்கலாம்.
5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். அட்டவணை வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
இப்பதவிக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தகுதியுடைய, உடையார்பாளையம் வட்டத்தைச் சேர்ந்தோர் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஒரு வெள்ளைத்தாளில் பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் போன்ற விவரங்களுடன் மார்பளவிலான புகைப்படம் ஒட்டி, சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சுயமுகவாõயிட்ட ரூ. 30-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட அஞ்சல் உறையுடன் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 24.05.2017 முதல் 31.05.2017 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.