அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஆக.7) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லப்பாங்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கூத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, அல்லிநகரம், பி.ஆர்.நல்லூர், கூத்தூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், வெண்மணி, வேட்டக்குடி, காடூர் நமங்குணம், புதுவேட்டக்குடி, கோயில்பாளையம், கீழப்பெரம்பலூர், துங்கபுரம் மற்றும் சுற்றியுள்ளகிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.