ஜயங்கொண்டம் அருகே காங்குழி தெற்குத் தெருவைச் சேர்ந்த தங்கவேல் மகன் சதாசிவம்(40), கீழத்தெருவைச் சேர்ந்த மாயவன் மகன் ரமேஷ்(35) ஆகியோரது வயல்கள் அருகருகே உள்ளது. ரமேஷின் வயலிலுள்ள மரத்தை வெட்டுவது தொடர்பாக இருவருக்கிடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், சதாசிவத்தின் தாய் ஜெயலட்சுமியை (70) திங்கள்கிழமை ரமேஷ் தாக்கினார். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் சதாசிவம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரமேஷைக் கைது செய்தனர்.