உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியை கல்லூரி முதல்வர் பி.பழனிச்சாமி தலைமையேற்று தொடக்கி வைத்தார். மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் சமூக பொருளாதார விளைவுகள், மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசு திட்டங்கள், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் விளைவுகள், பெண் கல்வியும், குடும்ப நலமும் போன்ற தலைப்புகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 42 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.தமிழ்மாறன், பெ.கலைச்செல்வன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நலப்பணித்திட்ட அலுவலர் வெ.கருணாகரன் செய்திருந்தார்.