அரியலூர் மாவட்டம் அசாவீரன்குடிக்காடு கிராமத்தில் திருவள்ளுவர் ஞான மன்றம் மற்றும் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் விதைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் முன்னோடி விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு விவசாயம் மற்றும் நாட்டு விதைகள் குறித்தும் விளக்கிப் பேசினர்.
கண்காட்சியில், நாட்டு நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, அருபதாம் குருவை மற்றும் பல்வேறு மரபு வகை நெல் விதைகள், நாட்டுக்கம்பு, குதிரை வாலி, சோளம் உள்ளிட்ட சிறுதானிய விதைகள், கடலை, உளுந்து, முந்திரி, நாட்டு பருத்தி விதைகள், அரியவகை மூலிகைச் செடிகள் மற்றும் மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.