Enable Javscript for better performance
செக் மோசடி: அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து காசோலை(செக்) மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    ஜயங்கொண்டம் அருகேயுள்ள ஆண்டிமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (63). இவர் அரசு கட்டட வேலைகளை ஒப்பந்தம்(கான்ராக்ட்) எடுத்து, மருதூரை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை ஒன்றியச் செயலர் செந்தில்நாதனிடம் (46) கொடுத்து கமிஷன் தொகையை பெற்று வருகிறார்.
    இந்நிலையில், ஒரு வேலை முடித்த வகையில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விஸ்வநாதன் பெயரில் உள்ள ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 200-க்கான காசோலை பெற்ற செந்தில்நாதன் தனது ஆதரவாளர்களான நாச்சியார்கோவில் சாமிநாதன் (30), திருநாகையூர் கோகுல் (27) ஆகியோருடன் சேர்ந்து, ஆள் மாறாட்டம் செய்து வங்கியில் கொடுத்து பணத்தை பெற்றுவிட்டதாகத் தெரிகிறது.
    தகவலறிந்த விஸ்வநாதன், செந்தில்நாதனிடம் கேட்டுள்ளார். பணத்தைத் தர மறுத்ததால், இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் ஆண்டிமடத்தில் தகராறு ஏற்பட்டது.
    இதுகுறித்து விஸ்வநாதன், அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து செந்தில்நாதன், சாமிநாதன், கோகுல் ஆகிய 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai