Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டத்தில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    துப்புரவுப் பணியாளர்கள் சங்க துணைச் செயலர் கொளஞ்சி தலைமை வகித்தார். சிபிஐ நகரச் செயலர் சின்னதுரை ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். ஏஐடியுசி மாநில செயல் தலைவர் சேதுராமன், மாநில துணைத் தலைவர் மீனாள், உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன துணைப் பொதுச்செயலர் தண்டபாணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர். சிபிஐ மாவட்டச் செயலர் உலகநாதன், மாவட்ட துணைச் செயலர் ஜெயராஜ், ஒன்றியச் செயலர் ராமநாதன் ஆகியோர் பேசினர்.
    நிரந்தர பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தாற்காலிக பணியாளர்களுக்கான சேமநலநிதி இருப்பு கணக்கை முழுமையாகக் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும். பிடித்தம் செய்யப்படும் எல்ஐசி உள்ளிட்ட தொகைகளை சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக வழங்க வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண் டும். வருடாந்திர ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்யப்படாதவர்களுக்கு செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணைச் செயலர் சிலம்புசெல்வி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai