Enable Javscript for better performance
தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து விவசாயிகள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    நிலுவைத் தொகை ரூ. 44 கோடியைத் தராத சாத்தமங்கலம் தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை கோரி அரியலூர்-தஞ்சை சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கீழப்பழுவூர் அருகே சாத்தமங்கலத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம்,அப்பகுதி கரும்பு விவசாயிகளுக்கு 2013-17-ஆம் ஆண்டு வரை ரூ. 44 கோடி நிலுவைத் தொகை தர வேண்டும். தற்போது இந்த ஆலையானது, வெறும் 4 கோடியை மட்டுமே கரும்பு விசாயிகளுக்கு கொடுத்துவிட்டு, முழுத் தொகையையும் பெற்றுவிட்டதாக உறுதிமொழி கடிதத்தைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், நிலுவைத் தொகை முழுவதையும்
    வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் மூ. மணியன், மாவட்ட துணைச் செயலர் பிச்சைப்பிள்ளை,விவசாய சங்க ஒன்றியச் செயலர் வரப்பிரசாதம்,பொருளாளர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாமித்துரை, முன்னாள் ஊராட்சித் தலைவர் கங்காதுரை,பாமக மாவட்டத் தலைவர் ரவிச்சங்கர்,மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம் ஆகியோர் அரியலூர்-தஞ்சை சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் போலீஸார் மறியலில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai